சினிமா

யுவன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்னிசை விருந்து

யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து ஒன்றை அளிக்க ஜெய்யின் `பலூன்' படக்குழு முடிவு செய்துள்ளது.

மாலை மலர்

காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜெய் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கிய இந்த கூட்டணி, மற்றோரு பலமான கூட்டணியையும் அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன் - அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. அந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றும், இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்பாடல், திறமை கொண்ட, சாதித்த இரு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிய முடியாது என கூறுபவர்களை 'ஷட் டப் பண்ணுங்க' என்பதை  உணர்த்தும்.

இப்படத்தின் மற்றொரு பாடலான ``மழை மேகம் நீயாட" யுவனின் பிறந்தநாளான வரும் 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.