சினிமா

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' டீசர், டிரைலர், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர், டிரைலர், இசை வெளியீடு, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள், டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

அன்பான ரசிகர்கள் ஆசைப்பட்டதால் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் அக்டோபர் மாதமும், நவம்பரில் டீசரும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரில் நடக்க இருக்கிறது. இதற்கிடையே அவ்வப்போது பாடல்கள் வெளியாகும்.

அதனைத் தொடர்ந்து படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.