சினிமா

மன்சூர் அலிகான் மகன் நடிக்கும் கடமான்பாறை

பிரபல நடிகர் மன்சூர் அலிகான், தனது மகனை கதாநாயகனாக வைத்து, ‘கடமான்பாறை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.

அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை’’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்கள்.

படம் பற்றி மன்சூரலிகான் கூறும்போது, ‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக்கதை! காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.