சினிமா

சதுரங்கவேட்டை-2 தாமதத்திற்கு இதுதான் காரணம் - தயாரிப்பாளர் மனோபாலா விளக்கம்

`சதுரங்கவேட்டை-2' படம் ரிலீசாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு காரணம் என்னவென்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா விளக்கம் அளித்திருக்கிறார். #SathurangaVettai2

எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. மனோபாலா தயாரித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. 

இதில் அரவிந்த்சாமி, த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, தீரஜ் ரத்னம், ஸ்ரீமன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னமும் ரிலீசாகவில்லை.

அரவிந்த்சாமிக்கும், தயாரிப்பாளருக்குமான பிரச்சனையால், அரவிந்த்சாமி டப்பிங் செய்ய வரவில்லை என இதுகுறித்து பல வதந்திகள் உலா வந்த நிலையில், படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் மனோபாலா விளக்கம் அளித்திருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், அரவிந்த்சாமிக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளத்தை நான் கொடுக்கவில்லை, எனவே அவர் டப்பிங் செய்யவில்லை. அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியிருக்கிறார். 

நிர்மல் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். #SathurangaVettai2