சினிமா

மன்னர் வகையறா

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் - கயல் ஆனந்தி - சாந்தினி தமிழரசன் நடிப்பில் வெளியாக இருக்கும் `மன்னர் வகையறா' படத்தின் முன்னோட்டம்.

மாலை மலர்

ஏ3வி சினிமாஸ் மற்றும் அரசு பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் மன்னர் வகையறா. 

பூபதி பாண்டியன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விமல் கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, சாந்தினி தமிழரசன், கார்த்திக், நாசர், நீலிமா ராணி, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், ரேதிகா ஸ்ரீனிவாஸ், பிக்பாஸ் ஜூலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, சுராஜ் நல்லுசாமி, இசை - ஜேக்ஸ் பிஜோய், கலை இயக்குநர்- கே.சம்பத் திலக், எடிட்டிங் - எம்.கோபி கிருஷ்ணா, சண்டைப்பயிற்சி - சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு - என்.விமல். எழுத்து, இயக்கம் - பூபதி பாண்டியன்.

படம் குறித்து இயக்குநர் பூபதி பாண்டியன் பேசம் போது,

“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம் என்றார்.

படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.