சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் மனீஷா யாதவ்

வழக்கு எண் 18/9, திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் தயாரிக்கும் படத்தில் மனீஷா யாதவ் நடிக்க இருக்கிறார். #ManishaYadav

மாலை மலர்

கிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனீஷா யாதவுக்கு முக்கிய இடம் உள்ளது. வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமானவர் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ‘திருநாள்’ படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனீஷா நடிக்கிறார். 

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் ‘சண்டா முனி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு ஆகியோருடன் மனீஷா நடிக்கிறார்.