இதில் தமிழ் பதிப்பினை பாலா இயக்குகிறார். நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதில் தமிழ், மலையாள ரீமேக் உரிமையை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.