‘ஜான்சன்துரை’, ‘வெள்ளிக்கிழமை 13-ம் தேதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மேஜிக் நிபுணர் சரவணகுமார். பேச்சாற்றலுக்காக டாக்டர் பட்டம் பெற்ற இவர், ‘மேயாதமான்’ படத்தில் பாதிரியாராக நடித்தார். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து கருணாகரன் ஹீரோவாக நடித்து வரும் ‘பொது நலன் கருதி’ படத்தில் கருணாகரனுக்கு தந்தையாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் ‘ரஷ்’ காட்சிகளை பார்த்த இயக்குனர் தினேஷ், அவர் இயக்கும் ‘மெழுகு’ படத்தில் சரவணகுமாருக்கு, முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறையை பார்த்து இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலர் மேடையிலேயே பாராட்டி உள்ளனர்.
மேஜிக், நிகழ்ச்சி தொகுப்பு, மேடை பேச்சு, நடிப்பு என்று ‘பிசி’யாக இருக்கும் மேஜிக் சரவணகுமார், விஷாலின் ‘சண்டைக்கோழி-2’, ‘மீண்டும் வா அருகில் வா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை இவர், கல்கி பகவானுக்கு காணிக்கையாக செலுத்திவிடுவதாக சொல்கிறார்.