சினிமா

சந்திரமௌலிக்கு கைகொடுக்கும் மாதவன்

திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்துக்கு நடிகர் மாதவன் கைகொடுக்க இருக்கிறார். #MRChandaramouli #Madhavan

கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இதில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்கள். திரு இயக்கியுள்ள இப்படத்தை பாப்டா நிறுவனம் சார்பாக தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 25ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. அதே நாளில் இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிப்பு செய்யும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார். கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் ஒரே படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.

SCROLL FOR NEXT