சினிமா

ரன்வீர் படத்தில் இருந்து விலகிய மாதவன்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கும் மாதவன் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். #Madhavan #Temper

இந்த நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வெற்றிபெற்ற ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிக்கிறார். ரோகித் ஷெட்டி இயக்குகிறார். தற்போது இந்த படத்தில் இருந்து விலகுவதாக மாதவன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து மீண்டு வருகிறேன். இதனால் ரோகித் ஷெட்டி படத்தில் என்னால் நடிக்க இயலவில்லை. அவரது படங்களின் ரசிகனாக இருக்கும் நான், இந்த படத்தில் நடிக்க இயலாமல் போனது வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். #Madhavan #Temper