ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
அதேநேரத்தில் `ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் ``பூம் பூம்" என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் பிரமாண்ட விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.