சினிமா

மிரட்ட வரும் `மாயவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மாயவன்' படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்ததால் அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

செப்டம்பர் மாதமே ரிலீசுக்கு தயாரான இந்த படம் தயாரிப்பாளர் - பைனான்சியர் பிரச்சனையால் வெளியாகாமல் இருந்தது. இதுகுறித்து சி.வி.குமார் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கந்துவட்டி புகாரால் குற்றம் சாட்டப்பட்ட அன்புச்செழியன் தரப்பு, சமீபத்தில் மாயவன் படத்தை வெளியிட தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

இதையடுத்து படம் விரைவில் வெளியாகும் என்று சி.வி.குமார் தெரிவித்திருந்தார். அதன்படி மாயவன் படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT