சினிமா

காமெடி காட்சிகளில் ரசித்து நடித்தேன் - அதிதி மேனன்

தினேஷ் ஜோடியாக ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் காதல் காட்சிகளைவிட காமெடி காட்சிகளில் தான் ரசித்து நடித்து வருவதாக அதிதி மேனன் தெரிவித்துள்ளார். #AditiMenon

மாலை மலர்

‘பட்டதாரி’ படத்தில் நடித்தவர் அதிதிமேனன். அடுத்து அமீர் இயக்கத்தில் ‘சந்தனதேவன்’ படத்தில் நடித்தார். இப்போது, ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

“இது காதல் காமெடி கலந்த படம். கிராமம் நகரம் இரண்டும் கலந்த கதை. இதில், அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறேன். எனது அப்பா-அம்மாவாக ஆனந்தராஜ், தேவயானி நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் காதல் காட்சிகளைவிட காமெடி காட்சிகள் தான் அதிகம். முதல் முறையாக இந்த படத்தில் நிறைய காமெடி காட்சிகளில் நடிக்கிறேன். இதில், ரசித்து நடித்து வருகிறேன். அட்டக்கத்தி தினேஷ், மொட்டை ராஜேந்திரனுடன் நான் நடித்திருக்கும் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படம் தியேட்டருக்கு வரும்போது ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள்.

மிகுந்த அனுபவசாலிகளான ஆனந்தராஜ், தேவயானி இருவரும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். நடிக்கும் போது நிறைய ஆலோசனைகள் வழங்குகிறார்கள்” என்றார். #AditiMenon