லாக்கப் பட போஸ்டர் 
சினிமா

லாக்கப்

அறிமுக இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்கப் படத்தின் முன்னோட்டம்.

ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பல படங்களில் நகைச்சுவை கலந்த படங்களில் இணைந்து வந்த வைபவ் - வெங்கட்பிரபு கூட்டணி முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸான கதாபாத்திரத்தில் "லாக்கப்" திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

SCROLL FOR NEXT