சினிமா

உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது சாதாரண வி‌ஷயம்: ஆன்ட்ரியா

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `அவள்' படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து நடிகை ஆன்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

மணிரத்னத்தினம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலண்ட் ராவ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா ஜெரோமியா நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் `அவள்' என்ற பெயரிலும், தெலுங்கில் `கிருஹம்' என்ற பெயரிலும், இந்தியில் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது.

வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சித்தார்த்தின் ஏடாகி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

SCROLL FOR NEXT