சினிமா

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் 'லீடர்'

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் ‘லீடர்’. முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படம் ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது வருகிற 29-ந்தேதி முதல் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.

முன்னதாக, பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். ‘லீடர்’ இவரது 2-வது படமாகும்.