சினிமா

உடல் மெலிய அறுவை சிகிச்சை செய்தாரா லட்சுமி மேனன்?

தற்போது உடல் எடையை குறைத்திருக்கும் லட்சுமி மேனன், கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

மாலை மலர்

கும்கி படம் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். பள்ளி படிப்பு படிக்கும் போதே கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் பள்ளியில் படிக்கும் பெண் போல் தோற்றம் இல்லாமல் இருந்ததால், பல படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் லட்சுமி மேனன் மிகவும் குண்டானார்.

இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அஜித்துடன் நடித்த ‘வேதாளம்’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார் லட்சுமிமேனன். இதனால் அவரது ஹீரோயின் இமேஜ் பாதித்தாக கூறப்பட்டது. கடைசியாக இவரது நடிப்பில் ‘றெக்க’ படம் வெளியானது.

இப்படத்திற்குப் பிறகு இவரது நடிப்பில் கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், மிகவும் குண்டாக இருந்த லட்சுமி மேனன் தற்போது உடல் எடையை குறைத்து, யாரும் அடையாளம் காணமுடியாதளவிற்கு ஒல்லியாகி விட்டார். சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் லட்சுமிமேனன். இதைப்பார்த்த ரசிகர்கள் இது லட்சுமிமேனனா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். 

லட்சுமி மேனன் உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகாவது லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.