சினிமா

8 தோட்டாக்கள் பட இயக்குநருடன் இணைந்த அதர்வா

`8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் த்ரில்லர் கதையில் நடிகர் அதர்வா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #KuruthiAatam #Atharvaa

அதர்வா நடிப்பில் `இமைக்க நொடிகள்', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அதர்வா அடுத்ததாக `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் உடன் இணைந்திருக்கிறார்.

`குருதி ஆட்டம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திக் பூஜை சமீபத்தில் நடந்தது. படம் குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசும் போது, "இந்த படம் முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் உருவாக இருக்கிறது. திரில்லர் பிண்ணனியில் உருவாகும் இந்த படம் அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.  

ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KuruthiAatam #Atharvaa