சினிமா

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் `குரங்கு பொம்மை'

நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `குரங்கு பொம்மை' படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

மாலை மலர்

இப்படத்தில் நாயகனாக வித்தார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸ்-ம் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பால் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து சரவணன் பேசும் போது,