சினிமா

குரங்கு பொம்மை ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரதிராஜா - விதார்த் நடிப்பில் நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். மேலும் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாகவும், ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் படமாக்கி இருக்கிறார்கள்.