சினிமா

குப்பத்து ராஜா

பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா நடிப்பில் உருவாகி இருக்கும் `குப்பத்து ராஜா' படத்தின் முன்னோட்டம். #KuppathuRaja #GVPrakashKumar

மாலை மலர்

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'.

ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு - மகேஷ் முத்துஸ்வாமி, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - கிரண், சண்டைப்பயிற்சி - அன்பறிவ் & திலீப் சுப்பராயன், பாடல்கள் - லோகன், தயாரிப்பு மேற்பார்வை - எம்.அம்பிகாபதி, நிர்வாக தயாரிப்பு - கர்ணராஜா, இணை தயாரிப்பு - படூர் ரமேஷ், தயாரிப்பு - சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி, கதை, வசனம், இயக்கம், நடனம் - பாபா பாஸ்கர்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசும்போது,

நடன இயக்குனராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ், என் இயக்குனர் கனவை நனவாக்கியவர் ஜிவி பிரகாஷ். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்கு வரம். கலை இயக்குனர் கிரண் ராயபுரத்தை சேர்ந்தவர் என்பதால் மிகவும் உதவிகரமாக இருந்தார். இந்த குழுவில் எங்களை மிகச்சிறப்பாக வழிநடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார். 

பலமான பல கலைஞர்கள் சேர்ந்தது தான் இந்த குப்பத்து ராஜா. யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள் என்றார்.

படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வருகிறது. #KuppathuRaja #GVPrakashKumar #Parthiban #PoonamBajwa #PalakLalwani