சினிமா

தாய்லாந்து காடுகளில் உருவாகும் ‘கும்கி-2’ படத்தில் நாயகியான ஜீவிதா மகள்

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி-2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடிகை ஜீவிதா மகள் ஷிவானி நடித்து வருகிறார்.

மாலை மலர்

தற்போது மீண்டும் ‘கும்கி’ படத்தின் 2-வது பாகத்தை பிரபுசாலமன் இயக்கி வருகிறார். இதில் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்த மதி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரி மகன். மதியின் ஜோடியாக நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தாய்லாந்தில் தொடங்கியது. அங்குள்ள அடர்ந்த காடுகளில் யானை கூட்டங்களுடன் படமாகி வருகிறது. இதுவும் யானையை மையமாக கொண்ட படம். எனவே, படப்பிடிப்பை அங்கு தொடங்கி இருக்கிறார்கள். யானைகள் தொடர்பான அனைத்து காட்சிகளையும் படமாக்கிய பிறகு இந்தியா திரும்புகிறார்கள்.