சினிமா

கழுகு-2 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் `கழுகு-2' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிபரல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kazhugu2 #Krishna

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது.

கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் கைப்பற்றியிருக்கிறது.

இந்தப படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி படம் உருவாகி வருகிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi

SCROLL FOR NEXT