சினிமா

கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு

கடந்த ஆண்டு மலையாள படங்களுக்கான கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘டேக் ஆப்’ படத்துக்காக பார்வதி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மலையாள படங்களுக்கான கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘ஆளொருக்கம்’ படத்துக்காக இந்திரன்ஸ் சிறந்த நடிகராகவும், ‘டேக் ஆப்’ படத்துக்காக பார்வதி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

‘ஒட்டமுறி வெளிச்சம்’ சிறந்த படமாகவும், ‘ஈ மா யாவு’ படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் சிறந்த இயக்குனராகவும் விருது பெறுகிறார்கள். அலன்சியர், பாலி வல்சன் ஆகியோர் குணச்சித்திர நடிகர் விருதையும், ‘தொண்டிமுதலும் திரிசக்‌ஷியும்’ படத்துக்காக சஜீவ் பலூர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதையும் பெறுகிறார்கள்.

சிறந்த பாடலாசிரியர் விருது பிரபா வர்மாவுக்கும், சிறந்த பாடகர் விருது ஷாஹாபாஸ் அமானுக்கும், சிறந்த பாடகி விருது சித்தாரா கிருஷ்ணகுமாருக்கும் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT