சினிமா

விஜய் படத்தில் திடீர் மாற்றம் - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கரு' படத்தின் பெயரை தியா என்று மாற்றியிருக்கும் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #Karu #Diya #SaiPallavi

மாலை மலர்

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு'. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பெயர் `தியா' என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Karu #Diya #SaiPallavi