சினிமா

வசனங்களே இல்லாத பிரபுதேவாவின் மெர்குரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் வசனங்களே இல்லாத படமாக உருவாகி இருக்கும் மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Mercury #Prabhudeva

மாலை மலர்

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டே படப்பிடிப்பை முடித்த நிலையில், படத்தின் ரிலீசுக்கு கார்த்திக் சுப்பராஜ் தற்போது தேதி குறித்துள்ளார். அதன்படி `மெர்குரி' தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. #Mercury #Prabhudeva