`துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நரகாசூரன்'. படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மார்ச் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டம், திரையரங்குகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், கார்த்திக் நரேன் படம் வருகிற மே மாதம் ரிலீசாக இருப்பதாக மறைமுகமாக கூறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேன் அவரது அடுத்த படமான நாடக மோடை படத்தில் தற்போது பிசியாகி இருக்கிறார். #Naragasooran