சினிமா

ஒரே நாளில் இணையத்தை கலக்கிய கார்த்தி, விக்ரம், த்ரிஷா

கார்த்தி, விக்ரம், த்ரிஷா ஆகியோரின் படங்கள் சம்மந்தமான வீடியோக்கள் இணைய தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாலை மலர்

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அதுபோல், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் படத்தை இயக்கியுள்ளார்.

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டீசரை கார்த்தி இன்று வெளியிட்டார். ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் இப்படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.