சினிமா

‘கர’ டிரெய்லர் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள கர படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில், ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் கர. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.