சினிமா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் கமல்ஹாசன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து அடுத்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நடிகர் கமல்ஹாசன் சந்திக்க இருக்கிறார்.

சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். தனது அரசியல் பிரவேசத்துக்காக முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் கேரளா சென்ற கமல் அந்த மாநில முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார். கேரளா சென்றது அரசியல் சுற்றுப்பயணம் என்றும் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கமல்ஹாசனை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்கள்.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்து இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கூறிய கமல், ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் எனது நண்பர்கள் என்றார். கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

அடுத்து மேங்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பின் போது, அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்து, அரசியலுக்கு வருவது குறித்து மம்தா பானர்ஜியிடம் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT