சினிமா

குரங்கனி தீ விபத்து - சென்னை பெண்களின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்

தேனி மாவட்டம் குரங்கனி தீ விபத்தில் உயிரிழந்த சென்னை பெண்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியிருக்கிறார். #KamalHaasan #TheniFire

மாலை மலர்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலையில் கடந்த 11-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சென்னை, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த 16 பேர் பரிதாபமாக காட்டுத்தீக்கு பலியானார்கள். மேலும் பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த உஷா தமிழொளி மற்றும் அனுவித்யா குடும்பத்தினரை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல், இந்த விஷயத்தை ஒரு பாடமாகக் நினைத்து, இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். #KamalHaasan #TheniFire