சினிமா

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து : கமல் வரவேற்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு நடிகர் கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்தது குறித்து கமல் இவ்வாறு பதிவிட்டுள்ள நிலையில், பௌர்ணமியை நோக்கி, மயங்கா நீதி தேவர் என்று கமல் யாரை குறிப்பிடுகிறார்? என்ற குழப்பம் டுவிட்டர் வாசிகளிடையே மேலோங்கியுள்ளது.