இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து கமல் - சங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்தனர். போட்டோ ஷூட் முடிந்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் அதன் பிறகு அதனை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வாரம் இது தொடர்பாக ரகுமானை சந்தித்திருக்கிறார் கமல். ‘கமலுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ரகுமான் பதிவிட்டு இருந்தார். கமலும் தலைவன் இருக்கின்றான் படத்தை உறுதி செய்தார்.