ரவீணா டாண்டன், பிரஷாந்த் நீல் 
சினிமா

கேஜிஎப் 2-வில் இணைந்த கமல் பட நடிகை

பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் பட நடிகை இணைந்துள்ளார்.

மாலை மலர்

பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. இப்படம் ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். 

படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடிக்க உள்ளார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து "தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்ட பெண் வந்துவிட்டார்" என்று இயக்குநர் பிரசாந்த் நீல் டுவிட் செய்துள்ளார். நடிகை ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.