சினிமா

கிறிஸ்டோபர் நோலனை சந்தித்த கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசியுள்ளார்.

மாலை மலர்

பிரபல ஹாலிவுட் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன். இவர் ஹாலிவுட்டில் ‘தி டார்க் நைட்’, தி டார்க் நைட் ரைசஸ்’, ‘இண்டர்செல்லர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியா வந்துள்ளார். இவரை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து கமல் கூறும்போது, “கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அவர் இயக்கத்தில் வெளியான ‘டன்கிர்க்’ படத்தை பிலிம் ரீலில் பார்க்காமல், டிஜிட்டலில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்குப் பதிலாக நான் இயக்கி, நடித்த ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவரிடம் கொடுத்துள்ளேன். நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை அவர் பார்த்திருப்பதாகத் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.