சினிமா

‌‘இந்தியன்-2’ படத்திற்காக மீண்டும் இணையும் ஷங்கர் - கமல்ஹாசன்

‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘இந்தியன்-2’ படம் விரைவில் தயாராகிறது.

மாலை மலர்

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.0’ பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஷங்கர் அடுத்ததாக அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘2.0’படம் வெளியானதும், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கமலின் ‘இந்தியன்’ படத்தின் 2-வது பாகம் தயாராக இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தற்போது கமல்ஹாசன் கூறி வரும் அரசியல் கருத்துக்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் ஊழலை எதிர்த்தும், அரசியல் நேர்மையையும், சீர்திருத்தத்தையும் சுட்டிக்காட்டிய இந்தியன் படத்தின் 2-வது பாகம் தயாரித்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். கமலின் கருத்துக்களையும் இதில் அழுத்தமாக கூறமுடியும். எனவே, ‘இந்தியன்-2’ படத்தை ‌ஷங்கர் இயக்க அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.