சினிமா

முக்கிய கட்டத்திற்கு நகர்ந்த பரத்தின் காளிதாஸ்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ்’ படம் அடுத்த கட்டத்திற்கு படக்குழு முன்னேறியுள்ளது. #Kalidaas #Bharath

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. 

பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். நாளைய இயக்குநர் சீசன் - 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கூறும்போது,

‘சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத் ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம். 

சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்.’ என்றார். #Kalidaas #Bharath

SCROLL FOR NEXT