சினிமா

நிறத்தை மாற்ற பல லட்சம் செலவு செய்த களஞ்சியம்

இயக்குனர் மற்றும் நடிகரான மு.களஞ்சியம், படத்திற்காக தன்னுடைய நிறத்தை மாற்ற பல லட்சம் செலவு செய்திருக்கிறார்.

இதில் நடித்தது குறித்து களஞ்சியம் கூறும்போது, “இந்த படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வேலை செய்யும் இர்பான் என்கிற இஸ்லாமிய அதிகாரியாக நடித்திருக்கிறேன். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம். அதில் நடிக்க தடையாக இருந்தது எனது நிறம். எனது நிறத்தை கொஞ்சம் வெளுப்பாக மாற்றி, ஓர் இஸ்லாமியர் போல தோற்றத்தை கொண்டு வந்தால் நீங்கள் நடிக்கலாம், முடியுமா? என்று இயக்குனர் டி.கிருஷ்ணசாமி என்னிடம் கேட்டார்.

அதை ஏற்று சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி தலைமை மருத்துவர் கார்த்திக்கை சந்தித்தேன். அவர் மூன்று மாதம் போராடி எனது நிறத்தை மொத்தமாக மாற்றினார். இதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பரிசாக ‘களவு தொழிற்சாலை’ படத்தில் நடிக்கிற வாய்ப்பை படத்தின் இயக்குனர் எனக்கு அளித்தார். படத்தின் வெற்றியும் எனது கதாப்பாத்திரத்தின் வெற்றியும் எனக்கு பெரும் மகிழ்வை தந்துள்ளது.

SCROLL FOR NEXT