நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது என்று உதவி இயக்குனர் கேட்கும் கேள்விக்கு அந்த இளைஞர், ‘நடிச்சா ஹீரோதான். நான் வெயிட் பண்ணுறேன். அப்புறம் கொஞ்சம் அரசியல், சி.எம்., அப்புறம் டெல்லி, அதுபோதும்’ என்று வசனம் பேசி அசத்தியிருப்பார். இந்த காமெடியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக சிரிக்காமல் இருக்கவே முடியாது.
அந்த இளைஞரின் பெயர் பல்லு பாபு. ‘காதல்’ படத்திற்கு பிறகு பல்லு பாபுவை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. இந்நிலையில், அவர் ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது. ‘காதல்’ படத்திற்கு பிறகு அவர் எந்த சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடிப் போகவில்லை என்றும், அவருடைய அப்பாவும் அம்மாவும் இறந்தபிறகு வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.