அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.