சினிமா

கடைக்குட்டி சிங்கம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கேரள திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கேரள திரையரங்கு உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

SCROLL FOR NEXT