சினிமா

காத்திருப்போர் பட்டியல்

பாலய்யா டி.ராஜசேகர் இயக்கத்தில் சச்சின் மணி - நந்திதா நடிப்பில் கலகலப்பான ரெயில் பயண கதையாக உருவாகி இருக்கும் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தின் முன்னோட்டம்.

சச்சின் மணி நாயகனாக நடிக்கும் இதில், நந்திதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஷியான் ரோல்டன் இசை அமைக்கிறார். எடிட்டிங் - ரூபன், நடனம் - ஷோபி, நோபிள், ஸ்டண்ட் - எம்.கணேஷ், தயாரிப்பு - பைஜாடாம், இயக்கம் - பாலய்யா டி.ராஜசேகர்.

“தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்கள் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்லும் படமாக ‘காத்திருப்போர் பட்டியல்’ உருவாகி இருக்கிறது. இது ரெயில் பயணத்தில் நடக்கும் காதல், ரெயில்வே போலீசார் அதிரடி, பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் கலந்த கதை. இதை இயக்குனர் காமெடி கலாட்டாவாக சொல்லி இருக்கிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

நாயகி நந்திதா கூறும் போது... “ படத்தின் பாடல் காட்சியை பார்த்த போது நானா அது என்று ஆச்சர்யப்பட்டேன். என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி” என்றார்.

SCROLL FOR NEXT