சினிமா

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான காளி பட நாயகி

இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குநருடன் கூட்டணி வைக்க இருக்கிறார். #HarishKalyan #RanjithJayakodi

மாலை மலர்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். 

பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு, இதுதான் முதல் தமிழ் படம். பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் இவர், படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். படத்தில் ஷில்பாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா நடிக்க இருக்கிறார். 

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. #HarishKalyan #RanjithJayakodi #ShilpaManjunath