பொன்மகள் வந்தாள் பட போஸ்டர் 
சினிமா

பண்டிகை தினத்தன்று ஓடிடி-யில் ரிலீசாகும் பொன்மகள் வந்தாள்?

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனத்திடம் இரண்டு மடங்கு லாபத்தில் விற்றுள்ளனர். இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ்செய்ய தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படத்தை ரம்ஜான் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற மே 25-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.