சினிமா

நாச்சியார் டீசரில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் ஜோதிகா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மாலை மலர்

இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இதை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசரில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக தோன்றி இருக்கிறார். மேலும் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசரில் ஒரு ஆக்ஷன் படம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது.

டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.