சினிமா

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

‘கீ’, ‘கலகலப்பு-2’ படங்களை தொடர்ந்து ஜீவா தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘ஜிப்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு-2’ படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ‘கீ’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

இந்நிலையில், ஜீவா தற்போது, சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலிணி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு நள்ளிரவு 12.01 மணிக்கு அறிவிப்பதாக படக்குழுவினர் தெரிவிந்திருந்தனர். அதன்படி அந்த படத்திற்கு ஜிப்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.