சினிமா

நள்ளிரவில் புதிய அறிவிப்பை வெளியிடும் ஜீவா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை நடிகர் ஜீவா நள்ளிரவு அறிவிக்க இருக்கிறார். #JiivanextwithRajumurugan

மாலை மலர்

ஜீவா நடிப்பில் தற்போது ‘கீ’ படம் உருவாகி உள்ளது. கல்லீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதுபோல், சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்திலும் ஜீவா நடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ‘கொரில்லா’ படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். 

இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பை நள்ளிரவு 12.01 மணிக்கு அறிவிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் ராஜு முருகன். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்தின் தலைப்பை என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.