சினிமா

அம்மா இடத்தில் தங்கை இருக்கிறாள் - ஜான்வி

எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கூறியிருக்கிறார். #Jhanvi #JhanviKapoor

மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஸ்ரீதேவி மறைவிற்கு பிறகு போனி கபூர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் மகள்கள் இருவருடனும் கலந்துகொள்கிறார்.

இதுபற்றி ஜான்வியிடம் கேட்கப்பட்டதற்கு ’’அதுதான் எங்களைப் பாதுகாப்பாக உணரவைக்கிறது. அப்பாவுக்கும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவின் இழப்பு எங்கள் பாசப் பிணைப்பில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாவை இழந்துவிட்டோம்.

இந்த இழப்பை நாங்கள் யாரும் எதிர்பார்க்க வில்லை. எனக்கு அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்வது தங்கை குஷி தான். வெளிப்படையாகச் சொல்வதென்றால் குஷிதான் என் மீது அதிகளவு பாசத்தை வெளிப்படுத்துவாள்.

எனக்கு அந்த அளவிற்கு தெரியாது. என்னை ஒரு குழந்தை போல் பாவித்து என் மீது எப்போதும் அதீத அக்கறை கொண்டிருப்பாள். இப்போதெல்லாம் என்னைத் தூங்கவைக்கும் வேலையை குஷி எடுத்துக்கொண்டாள்’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.

SCROLL FOR NEXT