சினிமா

எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் - ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். #Jhanvi #Dhanush

கடந்த பிப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜான்வி கூறி இருப்பதாவது:- ‘இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது.

‘நான் வளர்ந்து விட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை தான் தேடுவேன். சில நேரம் எனக்கு உணவு ஊட்டிவிடுவார். தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார். அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வையுங்கள் என்றேன். 

அம்மா பொருட்களை எடுத்து வைப்பதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்’ என்றார்.