ஜெயம் ரவி 
சினிமா

ஜெயம் ரவியின் 25-வது படம்.... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்

ஜெயம் ரவியின் 25-வது படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மாலை மலர்

ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.

பூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.